இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை 253 பேர் கொல்லப்பட்டதுடன் 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் கடந்த 21-ந் திகதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையும், இரவு நேர ஊரடங்கு உத்தரவும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இலங்கைக்கு பயணம் செய்வதை பாதிப்பதாக உள்ளது. எனவே அங்கு தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இலங்கைக்கு அத்தியாவசிய தேவைக்காகவும், அவசரம் கருதியும் பயணம் செய்யும் இந்தியர்கள் கொழும்பு , கண்டி உள்ள அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது
#indians #srilanka #church #curfew #travel