எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் முன்னாள் பாதுகாப்புத்தரப்புகளின் பிரதானிகளுக்குமிடையில்; சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நேற்றையதினம் நடைபெற்ற குறித்த சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஸபக்ஸ முன்னாள் இராணுவத் தளபதி, முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ, உதய கம்பன்பில மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் எதிர்கால தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு மகிந்த ராஜபக்ஸ முன்னாள் பாதுகாப்புத்தரப்பு பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #mahintharajapaksha #gottapaya #meeting #security
Add Comment