இந்தோனேசியாவில் செலவினங்களை குறைப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு முதல்முறையாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தியமையினால் ஏற்பட்ட பணிச்சுமையால் 272 அரசு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சுமார் 26 கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் முதல்முறையாக 3 தேர்தல்களும் ஒன்றாக நடத்தப்பட்ட நிலையில் இதில் 80 சதவீதம் பேர் இந்த தேர்தல்களில் வாக்களித்தனர்.
இந்நிலையில், தேர்தல்கள் சம்பந்தப்பட்ட கூடுதல் பணிச்சுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு வரை 273 பேர் உயிரிழந்ததாகவும் 1878 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசியா தேர்தல் ஆணையகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஓரு வருட சம்பளத்துக்கு நிகரான பணத்தை இழப்பீடாக வழங்க தேர்தல் ஆணையகம்; தீர்மானித்துள்ளதாக தெரிவிகி;கப்பட்டுள்ளது