இலங்கை பிரதான செய்திகள்

மற்றுமொரு 30 வருட யுத்தம் ஏற்படுவதனை ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதுடன் தாக்குதலுடன் தொடர்பான பலர் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜிஹாத் எனும் பெயரில் பயங்கரவாதிகள் மேற்கொண்டு வருகின்ற இத்தாக்குதல்கள் தொடர்பில், சந்தேக நபர்களை உடனடியாக இனங்கண்டு, அவ்வனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டி உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்காக உரிய தரப்பினருக்கு அரசாங்கம் கட்டளையினை விடுத்திருக்கின்றது எனவும் மற்றுமொரு 30 வருட யுத்தம் ஏற்படுவதனை ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளர்h.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உள்ள சில வீடுகளில் இருந்து பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றுவதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு முடிந்தது. இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள, அப்பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் பெற்றுக் கொடுத்த உளவுத் தகவல்களே பெரும் உதவியாக அமைந்தது.

குண்டுகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற இரசாயன பதார்த்தங்கள் உட்பட மேலும் பல உபகரணங்கள் அந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்டது. ஒரு வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களது குடும்பம் சகிதம் தற்கொலை செய்து கொண்டனர். மற்றுமொரு தரப்பினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களை இனங்காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
வனாத்தவில்லு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களினுள் டி56 ரக துப்பாக்கிகளும் காணப்படுகின்றன. கம்பளையிலும் மிக முக்கியமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பல சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எமக்கு ஏழு புலனாய்வுப் பிரிவுகள் உள்ளன. அவர்கள் கடந்த மூன்று, நான்கு வருடங்களினுள் வெளிநாட்டு புலனாய்வு சேவைகளுடன் மிகக் கிட்டிய தொடர்புகளை ஏற்படுத்தி தமது பணிகளை மேற்கொண்டு செல்கின்றனர். தற்போது அதை விடவும் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இந்த சம்பவம் தொடர்பில் பரிசீலனைகள் மேற்கொண்டு கடந்த வாரத்தில் பல சந்தேக நபர்களை இனங்கண்டு கொண்டனர்.

இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருப்பது முறையாக கட்டமைக்கப்பட்ட ஒரு சிறு குழுவினர் எனக்குறிப்பிட்டுள்ள பிரதமர் அவர்கள் சாதாரண முஸ்லிம் இனத்தவர்கள் இல்லை எனவும் வழிகெட்டு சென்ற தீவிரவாத கருத்துக்கள் கொண்ட சிலர் என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவரை கொலை செய்ததன் ஊடாக அவர்கள் இந்த குற்றங்களை செய்வதற்கு ஆரம்பித்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ம் திகதி அவர்கள் இந்த தாக்குதல்களை மேற்கொண்டனர். அதன் பின்னர் மாவனல்லை புத்தர் சிலையினை உடைத்து, அமைச்சர் கபீர் ஹாசிமின்; பிரத்தியேக செயலாளரை சுட்டனர். வனாத்தவில்லு அவர்களது பயிற்சி முகாமாக இருந்தது. இந்த அழிவுகளை அவர்கள் அதன் பின்னரே மேற்கொண்டனர். இந்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நாம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இந்நாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வீசா இன்றி பணிபுரிகின்ற ஆசிரியர்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரையும் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் முஸ்லிம் சமூகத்துடன் உரிய அமைச்சுக்கள் கலந்துரையாடி, பல்வேறு சட்டங்கள் மற்றும் எடுக்க நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானித்து, அரசாங்கத்திடம் முன்வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் எனும் ரீதியில் ஜிஹாத் பயங்கரவாதிகளை இல்லாதொழிப்பதற்கு ஒன்றாக செயற்படுவோம். எதிர்பார்க்கின்றோம். 1974ம் ஆண்டில் இங்கிலாந்து சட்டத்தின் படி நாம் இங் செயற்பட்டிருக்கின்றோம். அன்று அந்த சட்டமும் வடக்கு அயர்லாந்து பயங்கரவாதிகளுக்கு மாத்திரமே செயற்படுத்தப்பட்டது.

‘நபர் ஒருவர், ஏதேனுமொரு இனக்குழுவினரை அச்சுறுத்துவாரெனின், இலங்கையில் அல்லது வெளிநாட்டு அரசாங்கத்திற்கு சட்ட விரோதமான முறையில் தாக்கம் செலுத்துவாரெனின், அந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிறுத்துவாரெனின், ஏதேனுமொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பாரெனின் அவர் இலங்கையிலும் குற்றம் புரிந்தவர் ஆவார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்

#ranil #war #eastersundaylk

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link