கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று (29.04.19)அதிகாலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணியளவில் கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை சுற்றி இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது, கிளிநாச்சி காவற்துறையினரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் சோதனையின்போது மீட்கப்பட்டன.
துப்பாக்கி ரவைகள், சிறிய புகைப்படக் கருவி, கைத் தொலைபேசி என்பன மீட்கவைக்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டுரிமையாளர் இரும்பு வியாபாரி எனவும் இவை இரும்புடன் கலந்து வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.
Spread the love
Add Comment