தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரான சஹ்ரானின் நெருங்கியவரும் அவரின் தம்பியுடன் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டவர் எனக் கருதப்படும் வயது 38 அப்துல் கபூர் முகமது ரிஸ்வின் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி மாரசிங்க தலைமையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர். இன்று காலை காத்தான்குடி 2 ஆம் பிரிவு ரெலிகோம் வீதி ஏ.எச்.எம். பௌசி மாவத்தையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ.எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்பின் உறுப்பினரும் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவருமான சஹ்ரானின் தம்பியுடன் மாத்தறை கொழும்பிற்கு சென்று ஆயுதங்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக அதிரடிப்படையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதன்போது அவரின் வீட்டிலிருந்து ஒரு கைக்கோடாறியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.#eastersundayattacksrilanka #IslamicStateinSyria #ZahranHashim’s