141
உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் உள்ள குடியிருப்பில் மின் கசிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு இந்த குடியிருப்பில் ஒரு வீட்டின் மின்சார இணைப்புகளில் ஏற்பட்ட மின்கசிவு வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பரவியதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் வழங்க்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து அருகிலிருக்கும் குடியிருப்புகளுக்கு பரவாத வகையில் தீயை அணைத்துள்ளனர்.
Spread the love