ரொயிட்டர்ஸ் செய்தி சேவையின் ஒளிப்பட ஊடகவியலாளர் சித்திக் அஹமட் டனீஸ் என்பவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பு – கட்டானை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிற்குள் அத்துமீறி பிரவேசிக்க முற்பட்டதாக தெரிவித்து அவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார். கட்டானை புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த மாணவி ஒருவர் குறித்த செய்தியை திரட்டுவதற்காக அவர் பாடசாலைக்குச் சென்ற போது காவல்துறையினர் அழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே நீதிமன்றம் அவரை எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை தளமாக கொண்டு செயற்படும் அவர் புலிட்சர் சர்வதேச விருது பெற்ற ஒளிப்பட ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.#reutersnewsagency #arrest #kattanastantony’schurch eastersundayattackslk
ரொயிட்டர்ஸின் ஒளிப்பட ஊடகவியலாளர் சித்திக் அஹமட் டனீஸ் விளக்க மறியலில்..
162
Spread the love