மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்கி விட வேண்டாம்,மாணவர் ஒன்றிய தலைவர் கிரிசாந்
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் மாணவர்கள் மீது வழக்கு பதிந்து மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்கி விட வேண்டாம் என கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கிரிசாந் கோரியுள்ளார்.
யாழ்.பல்கலை கழகத்தினுள்நேற்றைய தினம் இராணுவத்தினர் தேடுதல் நடாத்திய போது , மாணவர் ஒன்றிய அலுவலகத்தினுள் இருந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் படங்கள் மீட்கப்பட்டன. அதனை தொடர்ந்து மாணவர் ஒன்றிய தலைவர் எம் திவாகர் மற்றும் செயலாளர் எஸ்.பபிலராஜ் ஆகிய இருவரையும் இராணுவத்தினர் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இரு மாணவர்களையும் கோப்பாய் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்நிலையில் யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஊடகவியலாளர்களை கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சந்தித்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் புகைப்படம் மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் இருந்ததாக கூறி தலைவர் செயலாளரை இராணுவத்தினர் கைது செய்து காவல்துறையினரிட் ம் ஒப்படைத்துள்ளனர்.
மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகம் தற்போது தான் பதவியேற்று உள்ளது. அவர்கள் பதவியேற்று 4 மாதங்கள் ஆகவில்லை. அந்நிலையில் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் தொடர்பில் எவரும் கவனம் செலுத்த வில்லை.
விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படமானது , பல ஆண்டு காலமாக அங்கே காணப்படுகின்றது. அது தொடர்பில் ஒன்றிய தலைவர் செயலாளர்களுக்கு எதுவும் தெரியாது.
விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் வந்திருந்தார்கள் என அவர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்க வேண்டாம்.
மாணவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாது தடுப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோருகின்றோம். மாணவர்கள் விடயத்தை அரசியலாக்காது , அவர்களின் விடுதலைக்கு அனைத்து தரப்பினரும் முன் வந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோருகின்றோம்.
அதேவேளை யாழ்.பல்கலை கழகத்தில் மீட்கப்பட்டதாக கூறப்படும் சப்பத்து பல்கலை கழக சுத்திகரிப்பு தொழிலாளியினுடையது. மிதிவெடி , தொலைநோக்கி என்பன கண்காட்சிக்காக கொண்டுவரப்பட்டவை. அவை போலியானவை (டம்மி) எனவே மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமுகமாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட வந்தவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்க கூடாது என தயவாக கேட்டு கொள்கின்றோம் என தெரிவித்தார்.
#prabaharan #ltte #jaffnauniversity #roundup