Home இலங்கைசற்றுமுன் உமையாள்புரம் பகுதியில் யாழ்தேவி விபத்து

சற்றுமுன் உமையாள்புரம் பகுதியில் யாழ்தேவி விபத்து

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் உமையாள் புரம் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றுடன் சற்றுமுன் விபத்துக்குள்ளாகியது

குறித்த விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளதுடன் சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பியுள்ளார்

அறிவியல் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் கழிவு அகற்றலை மேற்கொண்டு வரும் இவ் உழவு இயந்திரம் கழிவுகளை கொட்டிவிட்டு திரும்பிச் செல்லும் போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

#yarldevi #accident #umayalpuram #train

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More