144
டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாளக் குழுத் தலைவரான மாக்கந்துர மதுஷ் டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை யு.எல். – 226 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரைக் கைது செய்துள்ள குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு அழைத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#MahanthuraMathush #dubai #deport #underworld
Spread the love