தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் மீது திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்ட போது கொடநாடு விவகாரம் தொடர்பாகப் பேசிய போது தமிழக முதல்வர் எடப்பாடி மீது கொலைப்பழி விழுந்துள்ளது. அதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்திருந்தார்.
இதையடுத்து கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்தி ஸ்டாலின் பேசியுள்ளார் எனவும் தேர்தல் பிரச்சாரத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசியிருக்கிறார் எனவும் தெரிவித்து திருவாரூர் நகரக் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இதனை ஏற்ற காவல் துறையினர் உண்மைக்கு மாறான அவதூறு தகவல்களைப் பரப்புதல் சட்டத்தின் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது பொள்ளாச்சி விவகாரத்தில் அமைச்சர் வேலுமணியை தொடர்புப்படுத்தி பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#stalin #cheifminister # tamilnadu #edapadi