166
ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், காவல்துறையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 14 தலீபான்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஆப்கானிஸ்தானின் காந்தஹார் அருகே அமைந்துள்ள பாதுகாப்பு சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்துவதற்காக முற்றுகையிட்ட தலீபான்கள்; அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நோக்கி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் எதிர்த்தாக்குதல் மேற்கொண்டதில் 14 தலீபான்கள் கொல்லப்பட்டதுடன் 3 காவல்துறை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Taliban #killed #Clashes #Afghanistan
Spread the love