குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தாழ்வுபாடு மற்றும் கீரி ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பரிசோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 25 ற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசி வைத்திருந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பான இராணுவ நடவடிக்கையானது நேற்று சனிக்கிழமை (4) தாழ்வுபாடு மற்றும் கீரி கிராமங்களில் இடம் பெற்றது. குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது வீடுகள் மற்றும் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டது.
தொடர்ச்சியான நடவடிக்கைகளின் போது 25ற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபோசிகள் வைத்திருந்ததன் அடிப்படையில் குறித்த கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் மன்னார் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகள் மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#mannar #mobilephone #arrest #checking