மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தினரின் செயல்பாடுகளை கண்காணிக்குமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் சர்வதேச பயங்கரவாதியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கவும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடையும் விதித்து பாகிஸ்தான் அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது
இதுதவிர, ஏற்கனவே லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா உள்ளிட்ட சில பயங்கரவாத இயக்கங்களுக்கும் சில தலைவர்களுக்கும் பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தினரின் செயல்பாடுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு மாகாண அரசுகளுக்கு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சு; இன்று உத்தரவிட்டுள்ளது
#imrankhan #pakistan