கிழக்கு மாகாணத்தின் புனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘பற்றிக்கலோ கம்பஸ்’ ( Batticaloa Campus ) எனும் பெயரிலான ஷரியா பல்கலைக்கழகத்தில் எந்தவொரு பட்டப் படிப்பையும் முன்னெடுப்பதற்கு அனுமதி கோரப்படவில்லை என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், அதற்கான எந்தவொரு அதிகாரமும் வழங்கப்படவில்லை எனவும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் 15 பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முன்னெடுக்க முடியும் எனவும் குறித்த அறிக்கையின் ஊடாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அண்மைய காலமாக இப் பல்கலைக்கழக அமைப்பு மற்றும் இதற்கான நிதி, அனுமதி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இந் நிலையில் இப் பல்கலைக்கழகத்தில் கற்கை நெறியை தொடர முடியாது என்றும், அதற்கான அனுமதி ஏதும் இல்லை என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
#ugc #BatticaloaCampus #Kattankudy #ShariaUniversity