Home இலங்கைவீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை – பணம் – நகை கொள்ளை

வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை – பணம் – நகை கொள்ளை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மூதாட்டியின் கழுத்தில் காணப்படும் அடையாளத்தை வைத்தே கழுத்து நெரித்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர்;, அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்தனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பளை மகாதனையைச் சேர்ந்த 70 வயதான சுந்தரலிங்கம் கமலாதேவி என்ற மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மூதாட்டியின் வீட்டுக்கு இன்று காலை சென்ற உறவினர்கள், அவர் சடலமாகக் காணப்பட்டார் என காவல்துறை விசாரணையில் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தெல்லிப்பளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்

#robbery  #cash #jewellery

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More