உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பேசியமை குறித்து காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றியபோது, ராஜீவ் காந்தி மிஸ்டர் கிளீன் என காங்கிரஸ் கட்சியினரால் போற்றப்பட்ட போதும் கடைசி காலத்தில் அவருடைய வாழ்க்கை நம்பர்–1 ஊழல்வாதியாக தான் முடிவடைந்தது எனத் தெரிவித்திருந்தார்.
மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தநிலையில் நேற்றையதினம் தேர்தல் ஆணையகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
, இந்திய கலாச்சாரத்துக்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
#rajeevehanthy #narenthiramodi