Home பிரதான செய்திகள்உலககிண்ணப் போட்டிக்கான மேற்கிந்தியத்தியத் தீவுகள் அணியின் துணைத்தலைவராக கிறிஸ் கெயில்

உலககிண்ணப் போட்டிக்கான மேற்கிந்தியத்தியத் தீவுகள் அணியின் துணைத்தலைவராக கிறிஸ் கெயில்

by admin

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ம் திகதி முதல் ஜூலை 14-ம் திகதி வரை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் மேற்கிந்தியத்தியத் தீவுகள் அணிக்கு துணைத்தலைவராக கிறிஸ் கெயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ் கெயில் நியமிக்கப்பட்டமைக்கு அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் உட்பட பல வீர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மேற்கிந்தியதீவுகள் அணிக்காக எந்த போட்டியில் விளையாடினாலும் அது தனக்கு கௌரவம்தான் எனத் தெரிவித்த கிறிஸ் கெயில் இந்த உலகக் கோப்பை தனக்கு சிறப்பு வாய்ந்த தொடர் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு சிரேஸ்ட வீரராக, அணியின் தலைவர் மற்றும் அனைத்து வீரர்களுக்கும் ஆதரவாக அணியின் வெற்றிக்கு பாடுபடுவது தனது பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.

39 வயதான கெயில் மேற்கிந்தியதீவுகள் அணியின் தலைவராக 2007 முதல் 2010 வரை சுமார் 90 போட்டிகளுக்கு பணியாற்றியுள்ளதுடன் 103 டெஸ்ட் போட்டிகள், 289 ஒருநாள் போட்டிகள், 58 இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 18 ஆயிரத்து 992 ஓட்டங்களை எடுத்துள்ளாh என்பது குறிப்பிடத்தக்கது

#westindies #chrisgayle #woeldcup

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More