மியன்மர் ராணுவமும், ரோஹிஞ்சா போராளிகளும் போரிடுவது தொடர்பான உள்நாட்டு பாதுகாப்பு ரகசியங்களை கசியவிட்டதாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 ரொயிட்டேர்ஸ் பத்திரிகையாளர்கள் இருவரையும் தற்போது மியன்மார் அரசு விடுவித்துள்ளது.
மியன்மாரின் ராக்கீன் மாகாணத்தில் கடந்த 2017ம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக பங்களாதேசில் தஞ்சமடைந்துள்ள நிலையில் சர்வதேச ஊடகங்கள் மியான்மரில் இருந்து செய்தி சேகரித்து வந்தன.
இந்தநிலையில் சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் வா லோன், யாவ் சோய் ஊ என்ற இரு பத்திரிகையாளர்கள் கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இருவரையும் மியன்மார் அரசு இன்று விடுவித்துள்ளது என்பது குறிப்பிடதத்தக்கது
#Myanmar #Reuters #journalists #release