Home இலங்கைநீர்கொழும்பில் பள்ளிவாசல் உட்பட 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் – நகைகள் , பணம் கொள்ளை

நீர்கொழும்பில் பள்ளிவாசல் உட்பட 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் – நகைகள் , பணம் கொள்ளை

by admin

கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பள்ளிவாசல் உட்பட 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார்சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கிரவண்டிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

வீடுகளுக்குள் புகுந்தவர்கள் வீட்டிலுள்ள பொருட்களை அடித்து நொருக்கி சேதப்படுத்தியதுடன் சில வீடுகளிலிருந்து நகைகள் , பணம் உள்ளிட்டவற்றினை கொள்ளையிட்டுச்சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருகுழுக்களிடைய ஏற்பட்ட கைகலப்பினையடுத்து இந்தசம்பங்கள் இடம்பெற்றதனையடுத்து அதிரடிப்படையினர் மற்றும் படையினர் வந்து நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்ததுடன் ஊரடங்குச் சட்டமும் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் ஊரடங்குச் சட்டமும் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த வேளையிலும் குழுவொன்று உள்வீதிகளால் சென்று முஸ்லிம் மக்களின் வீடுகள் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#negambo #violence #muslims #houses #robbery

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More