டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் முறைப்பாடு செய்திருந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்ததனையடுத்து அந்தப் பெண்ணின் முறைப்பாடடடினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
அத்துடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள சதி தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வழக்கறிஞர்களும், பெண் உரிமை ஆர்வலர்களும் இன்று உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் போராட்டம் வலுப்பெற்றால் அதனை சமாளிக்கும் வகையில் அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு; தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
#Justice #RanjanGogoi #supremecourt #section144