Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் அஞ்சலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு , கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாடு , அரச கரும மொழிகள் , சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடத்தப்பட்டது. அதன் போது மாவட்ட செயலக அதிகாரிகள் , உத்தியோகஸ்தர்கள் மலரஞ்சலி செலுத்தி , மெழுகுதிரியேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து சர்வமத தலைவர்கள் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

#eastersundaylk #batticaloa #colombo #ntj

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More