150
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த அமெரிக்க அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்க வர்த்தக திணைக்களத்தின் கீழ் இலங்கையில் கடமையில் ஈடுபட்டிருந்த செல்சியா டிகமினாடா என்னும் அதிகாரி கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலின் போது காயமடைந்திருந்தார்.
அவர் மேலதிக சிகிச்சைக்காக விமானம் ஊடாக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
#eastersundaylk #usa #singapore #dead
Spread the love