கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோகச்செய்கையின் வாய்க்கால் துப்பரவு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காக முரசுமோட்டை கமக்கார அமைப்பினால் சுமார் பத்து இலட்சத்து 38 அயிரத்து 360 ரூபா நிதியினை எந்தவித பற்றுச்சீட்டுக்களுமின்றி விவசாயிகளிடமிருந்து அறவிட்டு செலவுறுதிச்சிட்டைகள் இன்றி முறையற்ற விதத்தில் செலவிட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக அறியமுடிந்துள்ளது.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோகச்செய்கைக்கான இவ்வாண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கை கூட்டம் கடந்த மார்ச்மாதம் 12ம்திகதி மாவட்ட அரச அதிபர் தலைமையில் கிளிநொச்சி மாவட்டசசெயலகத்தில் நடைபெற்று அதில் எடுக்கப்பட்டதீர்மானங்களுக்கு அமைவாக வாய்;ககால்துப்பரவு மற்றும் விதைப்பு கால்நடைக்கட்டுப்பாடு நீர்விநியோகம் என்பன தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள கமக்காரஅமைப்புக்கள் அதன் யாப்பு விதிகளுக்கும் சட்டவிதிகளுக்கு அமைவாகவும் சிறுபோகச்செய்கைக்கான வாய்க்கால் துப்பரவு மற்றும் கம விதானை வேதனம், விவசாயிகள் அங்கத்துவப்பணம், என்பவற்றை விவசாயிகளிடமிருந்து உரிய பற்று சீட்டுக்கள் மூலம் பெற்று கமக்கார அமைப்புக்களுக்கான வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு அதன்பின்னர் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி வேலைகளுக்காக செலவிட்டிருந்தன.
இந்நிலையில் முரசுமோட்டை கமக்கார அமைப்பின் யாப்பு விதிகளுக்கு மாறாக விவசாயிகளிடமிருந்து முறையற்றவிதத்தில் பெருமளவான பற்று;சீட்டுக்கள் இன்றி சேகரிக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ள போதும், சில நீர் விநியோக வாய்க்கால்கள் உரிய முறையில் புனரமைக்கவோ அல்லது துப்பரவு செய்யவோ இல்லையென்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் முறையிட்டுள்ளனர்.
குறிப்பாக, விவசாயிகளிடமிருந்து உரிய பற்றுச்சீடடுக்கள் மூலம் நிதி வங்கிக்கணக்கில் வைப்பிலிப்பட்டு புனரமைக்க வேண்டியமற்றும் துப்பரவு செய்யவேண்டிய வாய்க்கால்கள் தொடர்பில் நீர்ப்பானத் திணைக்களத்தினால் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கேள்வி கோரல் செய்யப்பட்டு அதன்பின்னர் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளுக்கான நிதிகள் விடுவிக்கப்படவேண்;டிய போதும், இந்த நிதி மேற்படி எந்தமதிப்பீடுகளோ அல்லது கேள்வி கோரல்களோ செய்யப்படாது செலவிடப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் 2019ம் ஆண்டுககான சிறுபோகச்செய்கையின் போது நிதிமுறைகேடுகள் இடம்பெற்றிருப்பது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாகபெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வாய்க்கால்களுக்கான மதிப்பீடுகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை என்றும் பிரதான மற்றும் நீர் விநியோக வாய்க்கால்களுக்கு கேள்வி கோரல்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், எந்தவிதமான பற்றுச்சீட்டுக்களுமின்றி விவசாயிகளிடமிருந்து சுமார் பத்து இலட்சத்து 38 ஆயிரத்து 360 ரூபா நிதி பெறப்பட்டு மேற்படி நிதி எந்தவிதமான செலவுறுதி சீட்டுக்கள் இன்றி செலவிடப்பட்;டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் மேலே குறிப்பிட்டுள்ள வரவு செலவு விபரங்களுக்குரிய பற்றுச்சீட்டுப்புத்தகங்கள் செலவுறுதிச்சீட்டுக்கள் எதுவும் இல்லாமல் கொப்பிகளில் பதிவு செய்யப்பட்ட விபங்களின் அடிப்படையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட:டுள்ளது.
ஓவ்வெரு விவசாயிகளும் தாங்கள் வழங்குகின்ற பணத்திற்கான உரிய பற்றுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் எதுவித பற்றுச் சீட்டுக்களுமின்றி எந்த நிதிகளையும் கமக்கார அமைப்புக்களுக்கு வழங்க கூடாது என்றும் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தினால் தெரிவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.#kilinochchi #iranamadukulam