167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பருத்தித்துறை திக்கம் கொட்டடி பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அல்வாய் மேற்கு , நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த நடராஜா சிவஜெகநாதன் (வயது 58) என்பவரே உயிரிழந்தவராவர்.
அது தொடர்பில் பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை உடல் கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
# friends #fainted #died
Spread the love