இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக குரோஷியாவை சேர்ந்த முன்னாள் வீரர் இகோர் ஸ்டிமாக் நியமிக்கப்பட்டுள்ளார்
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் கான்ஸ்டன்டைன ஆசிய கிண்ண கால்பந்து போட்டியுடன் பதவிவிலகியிருந்த நிலையில் புதிய பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் நியமிக்கப்பட்டுள்ளார்
இந்த பதவிக்காக 40 பேர் விண்ணப்பித்து இருந்தநிலையில் இகோர் ஸ்டிமாக் உட்பட 4 பேர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வாகியிருந்த நிலையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்ப குழுவின் நீண்ட நேர ஆலோசனைக்கு பின்னர் புதிய பயிற்சியாளர் பதவிக்கு இகோர் ஸ்டிமாக்கின் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
3 ஆண்டு காலம் இந்த பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்படும் அவர் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
51 வயதான இகோர் ஸ்டிமாக் 1998-ம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து போட்டியில் 3-வது இடம் பிடித்த குரோஷியா அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
# coach #Indianfootballteam #IgorStimac