குண்டுத்தாக்குதல்களின் பின்னர் தன்மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை தௌவுபடுத்தும்வகையில் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அவர் சபாநாயாகர் கரு ஜயசூரியவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக தன்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் பல்வேறு குற்றாச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்துள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தினை நாடவுள்ளதாகவும், அவருக்கான கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னிடம் 3500 ஏக்கர் காணி இருந்தால் அதனை கண்டுபிடிப்பது கடினமா என கேள்வி எழுப்பிய அவர் 52 நாட்கள் அரசியல் குழப்பத்தின்போது தனது உதவியை நாடிய போது அதற்கு தான உடன்படாமையினாலேயே இவடவறு தன் மீது இந்த குற்றம்சுமத்தப்படுவதாகவும் அதனை தான் முற்றாக மறுப்பதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தான் ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி செயலகத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் அனுப்பி வருவதாகவும் அதனை தாராளமாக பரிசீலிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #ministerrishardbadurdeen #speakerkarujayasuriya #eastersundayattacks