வெனிசூலாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதனையடுத்து துணை சபாநாயகர் எட்கர் ஜாம்ப்ரனோ கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட எட்கர் ஜாம்ப்ரனோ, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை சிறையில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தவிட்டதனையடுத்து அவர் இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ளார்.
எட்கர் ஜாம்ப்ரனோவை பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்றினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசூலாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து எட்கர் ஜாம்ப்ரனோ செயல்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவரை உடனே விடுவிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, வெனிசூலா அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
#venezuela #deputy #speaker #arrest #EdgarZambrano