150
கொழும்பு உயர் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்று 12.05.19) ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என, கொழும்பு பேராயர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் பிரிவினரால் அனைத்து தேவாலயங்களுக்கு அருகிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் பக்தர்கள் இன்று திருப்பலிகளில் கலந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பின் நிமித்தம் கடந்த 2 வாரங்கள் தேவாலயங்களில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
#church #eastersundayattackslk
Spread the love