173
கொழும்பு கல்கிசைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனம் ஒன்றில் சென்ற சந்தேகத்திற்குரிய குழுவொன்றினை நிறுத்தி சோதனையிட்டதனால் அப் பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. குறித்த குழுவினர், இராணுவத்தினரின் சோதனையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோதும் இராணுவத்தினரால் அவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர். #mountlaviniasrilanka
Spread the love