157
குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற முறுகல் நிலையையடுத்து அங்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார் .குளியாப்பிட்டிய கரந்திப்பெல பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குளியாப்பிட்டிய, பிங்கிரிய, மற்றும்,துமலசூரிய காவல்துறைப் பிரிவுகளில் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை காவல்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
#kuliyapitiya #curfew
Spread the love