பிரதான செய்திகள் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் -பெர்டென்ஸ் கிகி சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்

ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 7-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்சை எதிர்கொண்டிருந்தார்.

இந்தநிலையில் இறுதியில் 4-2 6-4, 6-4 என்ற நேர்செட்டில் 2 முறை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றிய சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி கிகி சம்பியன் கிணத்தினைக் கைப்பற்றியுள்ளார். 27 வயதான கிகி வென்ற 9-வது பட்டம் இதுவாகும் என்பதுடன் இந்த தோல்வியின் மூலம் சிமோனா ஹாலெப் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

#MadridOpenTennis #PertensKiki #Champion #Trophy

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link