பானி புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதனையடுத்து உயிரிழப்பு 64 ஆக அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த மூன்றாம் திகதி காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்த போது 175 முதல் 230 கிலோ மீற்றர்ர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிக்கப்பட்டிருந்தன. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்திருந்தது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி பானி புயலின் தாக்கத்துக்கு மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#odisha #fanicyclone