ஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவை அவை இன்று திங்கட்கிழமை புதைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்லி பல்கலைக்கழக மருத்துவமனையின் முன்னாள் உடற்கூறியல் பேராசிரியரான ஹெர்மன் ஸ்டீவ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்த மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.1952ஆம் ஆண்டு உயிரிழந்த அந்த மருத்துவரின் வாரிசுகள், கடந்த 2016ஆம் ஆண்டு இந்த மாதிரிகளை கண்டறிந்திருந்தனர்.
ஹிட்லரின் ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளை கொலை செய்த பின், அவர்களது உடல்களை பெற்று மாதிரிகளை சேகரிக்கும் பணியை பேராசிரியரான ஹெர்மன் ஸ்டீவ நாசிகளுடன் சேர்ந்த திட்டமிட்டு செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சுமார் ஒரு மில்லி மீற்றர் நீளமே உள்ள அந்த மாதிரிகளை சேகரித்த பேராசிரியர் ஹெர்மன் ஸ்டீவ்; அவற்றை சிறிய கறுப்பு நிற பெட்டிகளில் அவர்களது பெயர்களுடன் சேகரித்து வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
#politicalprisoners #killed #Hitler #buried #