ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் உள்ள புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது
மிகப்பெரிய துறைமுகமான இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த சரக்கு கப்பல்கள் வந்து செல்கின்ற நிலையில் இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நேற்று முன்தினம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
எனினும் தாக்குதல் நடத்தப்பட்ட விதம், எந்தநாட்டுக் கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாகின போன்ற தகவல்கள் வெளியிடவில்லை என்பதுடன் இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டின் 2 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் கப்பல்கள் சேதம் அடைந்ததாகவும் சவூதி அரேபியா நேற்று தெரிவித்துள்ளது
ஈரானை எச்சரிக்கும் விதமாக அமெரிக்கா போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியிருக்கும் நிலையில்; ஐக்கிய அரபு அமீரகத்தின் துறைமுகத்தில் சவூதி அரேபியா உள்பட அயல்நாடுகளின் சரக்கு கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#SaudiArabia #ships #attacked #UnitedArabEmirates #ஐக்கியஅரபுஅமீரகத்தில் #வெளிநாட்டுகப்பல்கள் #சவூதிஅரேபியா