Home இலங்கை கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மன்னாரில் 508 ஏக்கர் காணி கொள்வனவு….

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மன்னாரில் 508 ஏக்கர் காணி கொள்வனவு….

by admin

சாள்ஸ் நிர்மலநாதன்  நேரடியாக சென்று உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்…

மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் கிஸ்புல்லாவுக்கு சொந்தமான SEYLAN Business private limited நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இக் காணிகள் கொள்வனவு தொடர்பாக பெரும் சந்தேகம் இருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதன் தெரிவித்துள்ளார்.

மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.05.19) குறித்த ஓலைத்தொடுவாய் உவரி காணிப்பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் 508 ஏக்கர் காணியை பார்வையிட்டார்.

குறித்த காணியை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,,,

யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் பல பொது மக்களின் காணிகளை அடாத்தாகவும் அதே நேரத்தில் யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம் பெயர்ந்த மக்கள் காணிகளில் இல்லாமை காரணமாக அவர்களுடைய காணிகளையும் அடாத்தாக கொள்வனவு செய்து இங்குள்ள முஸ்லீம் நபர்களுடைய பெயர்களில் பெயர் மாற்றம் செய்து பல இடங்களில் பல ஏக்கர் காணிகளை முஸ்லீம் அரசியல்வாதிகள் கொள்வனவு செய்திருக்கின்றனர்.

குறிப்பாக தற்போது கிழக்கில் ஆளுனராக உள்ள ஹிஸ்புல்லா மன்னார் ஓலைதொடுவாய் உவரி என்ற பிரதேசத்தில் உள்ள 508 ஏக்கர் காணியை செலான் பிஸ்னஸ் பிரைவேட் லிமிட்டட் எனும் பெயரில் கொள்வனவு செய்துள்ளார் அந்த நிறுவனத்தின் இயக்குனராக ஹிஸ்புல்லா இருக்கின்றார் அதன் பெயரில் 508 ஏக்கர் காணிகளை 2013 ஆம் ஆண்டு கொள்வனவு செய்து இருக்கின்றார்.

இந்த 508 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்வதற்கு குறித்த நிறுவனத்திற்கு நிதி எவ்வாறு கிடைத்தது குறித்த அரசியல்வாதிக்கு எந்த அரபு நாட்டில் இருந்து எந்த செல்வந்தர் நிதி வழங்கினார் என்பது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்று ஜனாதிபதியினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது அதற்கு சவுதியை சேர்ந்த தனிப்பட்ட நபர் ஒருவர் ஹிஸ்புல்லாவிற்கும் அவருடைய மகனுக்கும் சொந்தமான நிறுவனம் ஒன்றிற்கு பெரும் தொகையான பணம் அனுப்பியிருக்கின்றார் அதன் மூலம் பல்கலைகழகம் கட்டப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள முஸ்லீம் மத தீவிரவாத அமைப்புக்களால் கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது. இந்த உவரிப்பகுதியும் ஒரு கத்தோலிக்க கிராமமாகும். இங்கிருந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து இந்தியாவிலும் வேறு பகுதிகளிலும் இருக்கின்றார்கள். ஆரம்பத்தில் இது ஒரு தமிழ் மக்களுடைய கிராமம் அதற்கு அடையாளமாக 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அந்தோனியார் ஆலயம் இங்கு இருக்கின்றது.

ஆக இப்படியான நில ஆக்கிரமிப்புக்களை முஸ்லீம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து அரபு நாடுகளில் உள்ள தனிப்பட்ட நபர்களின் நிதிகளை பெற்று தாங்களும் அந்த பணத்தில் சுக போகத்தை பெற்று இங்குள்ள தமிழ் மக்களின் காணிகளை எந்த அடிப்படையில் கொள்வனவு செய்கின்றார்கள்.

குறிப்பாக இந்த உவரி பகுதிகாணி தற்போது கிழக்கு ஆளுனர் எந்த அடிப்படையில் 508 ஏக்கர் கொள்வனவு செய்தார் அவருடைய உள்நோக்கம் என்ன என்பது தொடர்பாக தேசிய புலனாய்வு உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதுடன் அதற்குரிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.

இந்த செலான் நிறுவனத்திற்கு எவ்வாறு இவ்வளவு பணம் கிடைத்தது என்பது தொடர்பாகவும் விசாரித்து இந்த காணிகளை அரச உடைமையாக்கி இப் பிரதேசங்களில் காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் 508 ஏக்கர் காணிகள் என்ற போர்வையில் குறித்த பகுதியில் உள்ள 900 ஏக்கர் காணிகளை அடைத்து வைத்துள்ளதாகவும் எனவே உடனடியாக இது தொடர்பான விசாரணகளை முன்னெடுத்து உண்மை நிலையை வெளிக்கொண்டுவருமாறும் தெரிவித்துள்ளார்.#mlamhizbullah #MannarSriLanka #SEYLANBusiness privatelimited

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More