இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட திகதிக்கு ஒருநாள் முன்னதாகவே பிரச்சாரம் முடிவதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் ஏற்பட்ட தேர்தல் வன்முறை தொடர்பாக அம்மாநிலத்தில் நாளை மே17 ம் திகதி முடிய இருந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மே 16 ஆம் திகதி இரவு 10 மணியோடு முடிவதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் ஏழாவது கட்டம் மற்றும் நிறைவு கட்டமாக மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளில் மே 19ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் மே 17 ஆம் திகதி முடிவடைய இருந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையகம் பிரச்சாரத்தை ஒருநாள் முன்னதாகவே நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ரசியல் சாசனத்தின் 324 ஆவது பிரிவு தேர்தல் ஆணையகத்திற்கு அளித்துள்ள அதிகாரத்தின் படி மேற்கு வங்காளத்தில் பிரச்சாரத்தை ஒருநாள் முன்னதாகவே நிறுத்துவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
கடந்த மே 14-ஆம் திகதி கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியின்போது பாஜகவினருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் அதிகரித்து வன்முறையாக வெடித்ததனையடுத்தே தேர்தல் ஆணையகம் இந்ம முடிவினை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#தேர்தல் #தேர்தல்பிரச்சாரம் #election #bjp