210
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எப்-16 ரக விமானம் லொஸ் ஏஞ்சல்சில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகிலுள்ள கிடங்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது
விமானம் கீழே விழுவதற்கு முன்னதாகவே அதன் விமானி தனியே வெளியேறிவிட்ட நிலையில் விமானியின் உடல்நிலை குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
கிடங்கிற்குள் விழுந்த விமானம் ஏற்படுத்திய தீயை அங்கிருந்த தானியங்கி தீயணைப்பு அமைப்புமுறை அணைத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
#அமெரிக்க #விமானப்படை#விமானம் #விபத்து #usa #flight
Spread the love