Home உலகம்ஆசியாவில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு தாய்வான்; பாராளுமன்றம் ஒப்புதல்

ஆசியாவில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு தாய்வான்; பாராளுமன்றம் ஒப்புதல்

by admin

ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தாய்வான பாராளுமன்றம் நேற்றையதினம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் ஈர்ப்பாளர்கள்; திருமணம் செய்துகொள்ள சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தாய்வானிலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது.

இதுதொடர்பாக, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் வகையில் 2019 மே 24ம் திகதிக்குள் ; பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இரண்டாண்டு காலகெடு விதித்து கடந்த 2017-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக தாய்வான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்கள் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று வந்தநிலையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து இணைந்து வாழ்வதற்கு ஆதரவாக 66 பேரும் எதிராக 27 பேரும் வாக்களித்துள்ளனர்

இதன் மூலம் ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்த முதல் நாடு என்ற சிறப்பை தாய்வான் பெற்றுள்ளது.

#Taiwan #parliament #ஆசியா #ஓரினஈர்ப்பாளர்கள்  #தாய்வான்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More