ஓஸ்ரியாவில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகிய நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டரிடம் பிரதமர் செபாஸ்டியன் பரிந்துரை செய்துள்ளார்.
ஒஸ்திரியாவில், மைய வலதுசாரி மக்கள் கட்சி, தீவிர வலதுசாரி சுதந்திர கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கிறிஸ்டியன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதனையடுத்து அவர் பதவிவிலகியிருந்தார்.
இதனையடுத்து பிரதமர் அலுவலகத்தின் முன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்தக்கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் சில நாட்களில் ஒஸ்ரிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, திடீர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#ஓஸ்ரியா #துணைப்பிரதமர் #பதவிவிலகல் #தேர்தல் #austria