156
விண்ணில் ஏவப்பட்ட ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி-46 ரொக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
‘ரீசாட்-2பிஆர்1’ என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை இந்த ரொக்கெட் சுமந்துகொண்டு செல்கிறது. பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படும் இந்’த செயற்கைக்கோள் 615 கிலோ எடை கொண்டதுடன் அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
#செயற்கைக்கோள் #rocket
Spread the love