அட்டன் தொடக்கம் கண்டி வரை பயணிக்கும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்துகளை நாவலப்பிட்டி பொது பேருந்து தரிப்பு நிலையத்தில் நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து அட்டன் தொடக்கம் நாவலப்பிட்டி பொது பேருந்து தரிப்பு நிலையத்தின் ஊடாக கண்டிக்கு பயணிக்கும் தனியார்துறை பஸ் உரிமையாளர்கள் மற்றும் அரச போக்குவரத்து பேருந்துகள் இன்று ( 24.05.2019 ) போக்குவரத்து பணிபகிஷ்கரிப்பை அட்டன் மத்திய பேருந்து தரிப்பு நிலையத்தில் மையமாக வைத்து ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் அட்டன் தொடக்கம் கினிகத்தேனை, நாவலப்பிட்டி ஆகிய வழியாக கண்டிக்கு செல்லும் தனியார் போக்குவரத்து சபைக்கான பேருந்துகள் மற்றுமட இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளது.
இதனால் இன்று காலை முதல் அட்டன் தொடக்கம் கண்டி வரையிலான பயணிக்கும் அனைத்து பயணிகளும் பேருந்துகளும் சேவையின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ள நிலையில், மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.
(க.கிஷாந்தன்)
#அட்டன் #கண்டி #பேருந்து சேவை #பணிபகிஷ்கரிப்பு #பயணிகள்
Add Comment