Home இலங்கை உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..

உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மத நிறுவனங்களை நோக்கிச் சிலகேள்விகள் – நிலாந்தன்..

by admin

எல்லாமேவிதிப்படிதான் நடக்கும் எதையுமே நம்மால் மாற்ற இயலாது, என்று சொல்பவர்கள் ரோட்டைக் கடக்கும்போது இருபுறமும் பார்த்துவிட்டுக் கடப்பதைநான் பார்த்திருக்கிறேன் – ஸ்டீஃபன் ஹொக்கிங்.

கோயில்களின் காலம் முடிந்துவிட்டதுஎன்றுமு.தளையசிங்கம் கூறியிருக்கின்றார்.ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றியமிகமுக்கியஆன்மீக இலக்கியச் சிந்தனையாளர் செயற்பாட்டாளர் அவர். ஒருபுதுமதத்தை முழு மதத்தைஅவர் கனவுகண்டார்.

ஈழப்போர்க்களத்தில் எல்லாமதக் கோயில்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. போரில் ஈடுபட்டஎல்லாத் தரப்புக்களும் மற்றையதரப்பின் ஆலயங்களைஅல்லதுவழிபாட்டிடங்களைத் தாக்கியிருக்கின்றன. இதில் கடைசியாகநடந்ததாக்குதல்களேஈஸ்டர் குண்டுவெடிப்புக்களாகும். ஈழப்போரில் ஆயுதமோதல்கள் முடிவுக்குவந்துபத்துஆண்டுகளின் பின் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

ஈழப்போர்க்காலத்தில் பெரும்பாலானஎல்லாக் கோயில்களும் பாதுகாப்பை இழந்துகாணப்பட்டன. கோயில்களில்தஞ்சமடைந்தமக்களின் மீதுவிமானங்கள்குண்டுகளைப் போட்டன. இதனால் கோயில்கள் சேதமடைந்தன. கோயில்களில் தஞ்சமடைந்தமக்களைப் படையினர்சுற்றிவளைத்துப் பிடித்துச் சென்றனர். அல்லதுகோயில்களுக்குள் வைத்தேசுட்டுக்கொன்றனர். மசூதியில் வழிபட்டுக்கொண்டிருந்தமக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கொல்லப்பட்டார்கள். அனுராதபுரத்தில் போதிமரத்தைவணங்கிக்கொண்டிருந்தபக்தர்களும் கொல்லப்பட்டார்கள். தலதாமாளிகைதாக்கப்பட்டது. அதாவதுபோரில் சம்பந்தப்பட்டஎல்லாத் தரப்புக்களும் ஏதோஒருசந்தர்ப்பத்தில் ஆலயங்களைத்தாக்கியிருக்கிறார்கள்.

குறிப்பாகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரைஅவர்களுக்குத்தஞ்சம் புகுந்தபெரும்பாலானகோயில்களில் பாதுகாப்புகிடைக்கவில்லை. அது மட்டுமல்ல தொடர்ச்சியான பேரிடப் பெயர்வுகளின் போதுதமிழ் மக்கள் தமது இஷ்டதேவதைகளையும் வழிபாட்டிடங்களையும் கைவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.அதிசயங்கள் அற்புதங்கள் நடக்குமென்று நம்பிக் காத்திருந்தமக்கள் மிகமிகக் குறைவு. அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது என்று எக்ஸோடஸ் நாவலில் வருவது ஈழத்துதமிழர்களுக்கும் பொருந்துமா? தமது இஷ்டதேவைதையை முழுக்க முழுக்க நம்பித் தமது வழிபாட்டிடங்களில் இறுதிவரை தங்கியிருந் தமக்கள் மிகமிகக் குறைவு. அது ஓர் மிகஅரிதானதோற்றப்பாடு. குறிப்பாக1995இல் யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்தபோதுபெரும்பாலானபெருங்கோயில்கள் வழிபாடின்றியும் பூசைகளின்றியும் இருண்டுகிடந்தன. இடம்பெயர்வுநிகழ்ந்து நான்குநாட்களின் பின் சிலநண்பர்களோடுநான் யாழ்ப்பாணத்திற்குதிரும்பிவந்தேன். நல்லூரில் யாரும் இருக்கவில்லை. கோயிற்பிரகாரம் இருண்டுகாணப்பட்டது. என்னோடுவந்தஒருநண்பர் கூறினார். ‘இப்படிக் கோயில்களில் விளக்குகள் எரியாதஒருகாலம் வருமென்றுயோகர் சுவாமிகள் முன்னொருமுறை கூறியிருப்பதாக’

தமிழ் மக்கள் பேரிடப்பெயர்வுகளின் போதுபெரும்பாலும் கோயில்களைக் கைவிட்டு இடம்பெயர்ந்தார்கள் அல்லதுகோயிற் சுருவங்களையும் தங்களோடுசேர்ந்து இடம்பெயர்த்தார்கள். நாலாம் கட்டஈழப்போரின்போதுமடுமாதா இப்படிதேவன்பிட்டிவரையிலும் இடம்பெயர்ந்தார்.அவர் தொடக்கத்திலிருந்தேஅகதி மூர்த்தம்தான். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மடுமாதா மாந்தையிலிருந்து அகதியாக மடுவுக்கு வந்தார். மூன்றாங்கட்ட ஈழப்போரின் போது மடுமாதாவின் கோயிற் பிரகாரத்திலேயேபீரங்கிக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. தஞ்சம் புகுந்திருந்த பக்தர்கள் கொல்லப்பட்டார்கள்.

நாலாங்கட்டஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பெருங்கடலுக்கும் சிறுகடலேரிக்கும் இடையே இருந்தஒருசிறுதுண்டிற்குள் தமிழ் மக்கள் சிக்குண்டிருந்தபோதுசிறுகடலுக்குஅப்பால் முள்ளிவாய்க்காலைப் பார்த்துக்கொண்டுவற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் கோபுரம் காணப்பட்டது. எனதுநண்பர் ஒருவர் கூறுவர் அக்கோபுரமும் ஒருயுத்தசாட்சிஎன்று. ஆனால் ஜெனிவாவில் யுத்தசாட்சியம் சொல்லவற்றாப்பளைக் கோபரம் வரவில்லை. அதுமட்டுமல்ல எந்த ஒருபடைத்தரப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வற்றாப்பளைக் கோவிலுக்குட் புகுந்துதஞ்சம் புகுந்திருந்தமக்களைவேட்டையாடியதோஅதேபடைத்தரப்பின் பாதுகாப்போடு கடந்த திங்கட்கிழமை வற்றாப்பளை பெருவிழா நடந்திருக்கின்றது.

இப்படியாகஈழப்போர்க்களத்தில் ஆலயத்தில் தஞ்சம்புகுந்தமக்கள் பாதுகாக்கப்படவில்லை. ஆலயங்களும் பாதுகாக்கப்படவில்லை. ஆனாலும் ஆயுதமோதல்கள் முடிவடைந்தபின் மீளக் குடியமர்ந்தமக்களோடுகோயில்களும் பூசைகளும் வழிபாடுகளும் மீளக் குடியமர்ந்தன. உடைந்தஅல்லதுசிதைந்தகோயில்கள் மீள்க்கட்டியெழுப்பப்பட்டன. புதிதாகவும் கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவைபுலம்பெயர்ந்ததமிழர்களின் நிதியுதவியுடன் நடந்தன. தீவுப்பகுதிகளில் ஒருகோயில் முதலில் கிட்டத்தட்ட இரண்டுமில்லியன்ரூபாய்கள் செலவில் திருத்தப்பட்டது. ஆனால் அடுத்தடுத்தஆண்டுகோடிக்கணக்கானரூபாய் நிதிகிடைத்ததையடுத்துமுதலில் கட்டப்பட்டமண்டபம் உடைக்கப்பட்டுபுதிதாகவேறொன்றுமுன்னதைவிடபெரியதாகக் கட்டப்பட்டிருக்கின்றது. இத்தனைக்கும் தீவுப்பகுதிகளில் சிலபாடசாலைகளில் மாணவர்கள் காலைஉணவுஅருந்தாமல் படிக்கவருவதாகஅங்குவேலைசெய்யும் ஒருமருத்துவர் கூறுகிறார்.

இவ்வாறு2009ற்குப் பின் கோயில்கள் பெருமெடுப்பில் புனரமைக்கப்பட்டுபலவண்ணங்களிலும் ஜொலித்துக்கொண்டிருந்தஒருபின்னணிக்குள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அத்தாக்குதல்கள் குறிப்பாககோயில்களைக்குறிவைத்துநடத்தப்பட்டுள்ளன. இதையடுத்துகோயில்களைப் பாதுகாப்பதற்காகஅவற்றைச் சுற்றிப் படையினர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கொச்சிக்கடை அந்தோனியர் கோயிற்பகுதிகிட்டத்தட்டஒருகடற்படைவளாகம்போலகாணப்படுகின்றது. கடந்தவாரம் நல்லூர் கோயிலுக்குஆபத்துஎன்றுவெளிவந்ததகவலையடுத்துகோயில் வெளிவீதி மூடப்பட்டது. மிகச் செறிவாகபடையினர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டார்கள். ஒருமொட்டைக்கடிதத்தைவைத்துசோதனைநடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுகின்றன. ‘கடவுளுக்கு இதுவரைநான் எழுதியகடிதங்களுக்குஅவர் பதில் போட்டத்தில்லைஆனால் ஒருமொட்டைக்கடிதத்துக்குகடவுள் பயப்படுவதாகஅரசாங்கம் நம்புகிறது’என்றுஎனதுநண்பர் ஒருவர் பகிடியாகச் சொன்னார்.

நல்லூரில் கொச்சிக்கடையில் மட்டுமல்லபெரும்பாலானபெருங்;கோயில்களின் அருகேபடைப்பிரசன்னத்தைக் காணமுடிகிறது. தேவாலயங்களில் ஞாயிறுபூசைக்குவரும் பக்தர்களை வாசலில் வைத்துபொலிசாரும் படையினரும் சோதனைசெய்கிறார்கள். வற்றாப்பளை பெருவிழா கடந்த திங்கட்கிழமை நடந்தது. அதற்குவரும் பக்தர்கள் என்னென்னகொண்டுவரலாம் என்னென்ன கொண்டு வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டார்கள். கடைகள் அனுமதிக்கப்படவில்லை. எல்லாப் பக்தர்களும் சோதிக்கப்பட்டார்கள். வழமையாகவரும் பக்தர்களில்  மூன்றில் ஒருபங்கினரேதிருவிழாவிற்குவந்திருந்;தார்கள்.

இவ்வாறுதமதுஇஷ்டதேவையைஅல்லதுபுனிதரைவணங்கச் செல்லும்போதுசோதிக்கப்படுவதையிட்டுபக்தர்கள் என்னகருதுகிறார்கள்? தமதுகடவுளுக்கும் புனிதர்களுக்கும் படைத்தரப்பும் பொலிசும் பாதுகாப்புவழங்குவதையிட்டுமதகுருக்களும்,பூசகர்களும் ஆன்மீகவாதிகளும் என்னகருதுகின்றார்கள்?கடவுளுக்கே பாதுகாப்பில்லை எனவே படையினரை நிறுத்திகடவுளையும் கும்பிடவரும் பக்தர்களையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்களா? தன்னையும் தன்னை நம்பிவரும் பக்தர்களையும் ஏன் கடவுளாலும் புனிதர்களாலும் பாதுகாக்க முடியவில்லை? உயிர்த்தஞாயிறு அன்று தன்னை நம்பிவந்த பக்தர்களைஏன் அந்தோனியார் எதிரிகளிடம் கையளித்தார்?

இதுவிடயத்தில் ஸ்hபிக்கப்பட்டபெருமதங்கள் மட்டுமல்லஆவிக்குரியசபைகளும் பதில் கூற வேண்டும். செபம்,தியானம்,உபவாசம்,தவம் என்றுஆண்டவரோடுஉயிர்த்தொடர்பைபேணுவதாகநம்பப்படும்ஊழியர்க்காரர்களால் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களைஏன் முன்னுணரமுடியவில்லை? ஏன் தடுக்க முடியவில்லை? ஊழியக்காரர்களையும் ஆலயத்தையும் பக்தர்களையும்பாதுகாக்கும் பொறுப்பைபடைத்தரப்பிடம் ஏன் ஒப்படைத்தார்கள் ? கடவுளைவிடவும் படைத்தரப்புசக்திமிக்கதா? அப்படியானால் முப்படைகளின் தளபதியானஅரசுத்தலைவர் கடவுளைவிடசர்வவல்லமைபொருந்தியவரா?

எந்தஒருபடைத்தரப்புசென் ஜேம்ஸ் தேவாலயத்துக்குகுண்டுவீசியதோநவாலிசென்பீற்றர் தேவாலயத்திற்குகுண்டுவீசியதோமடுமாதாவின் பிரகாரத்தையுத்தகளமாக்கியதோவற்றாப்பளைஅம்மன் கோயிலில் தஞ்சம் புகுந்தமக்களைவேட்டையாடியதோஅதேபடைத்தரப்பிடம் பாதுகாப்புகேட்பதுஏன்? இக்கேள்விகளுக்கு எல்லாமதத் தலைவர்களும் பதில் கூற வேண்டும். கடவுளுக்குப் பாதுகாப்பில்லாத உடைந்த ஆலயங்களை அவசர அவசரமாகத் திருத்தி பூசிமினுக்குவதை விட இக்கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் கண்டுபிடிக்க வேண்டும். தளையசிங்கம் கூறியதுபோலஆலயங்களின் காலம் முடிந்துவிட்டதா? அல்லது எக்ஸ்ஸோடஸ் நாவலில் வருவதுபோலஅதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோமுடிந்துவிட்டதா?அல்லது தமதுபக்தி, விசுவாசம், வழிபாடு போன்றவற்றில் குறையுள்ளதா? என்று எல்லாமதப்பிரிவுகளும் சிந்திக்கவேண்டும். இடித்தகோயிலைமீளக் கட்டிபூசிமினுக்கிவழிபடும் பக்தர்கள் அக்கோயில் ஏன் இடிக்கப்பட்டது? யார் இடித்தது? அப்படி இடிக்கப்பட்டபோதுகடவுள் எங்கே?அல்லதுஅங்கேகடவுள் இல்லையா? ஏன்ற கேள்விகளைஏன் எழுப்புவதில்லை? யாந்திரிகமாக,சடங்காகமதங்களையும் மதகுருக்களையும்,ஊழியக்காரர்களையும்,பின்பற்றும் மந்தைகளாபக்தர்கள்?

இவ்வாறுசிங்களபௌத்தசிந்தனைகளைக்குருட்டுத் தனமாகப் பின்பற்றியதால் ரத்தம் சிந்தியஒருநாடுஅந்தஆயுதமோதல்கள் முடிவடைந்துபத்துஆண்டுகளின் பின் மற்றொரு மதத்தைத் தவறாக விளங்கி வைத்திருக்கும் சிறிய குருட்டு விசுவாசிக் கூட்டம் ஒன்றின் தற்கொலைஅரசியலுக்கு இரையாகியுள்ளது.

இலங்கைத்தீவில் நான்குபெருமதங்களும் உண்டு. ஒவ்வொருநாளும் காலையில் தனதுஒலிபரப்புக்களையும் ஒளிபரப்புக்களையும் மதப்பிரசங்கங்கள் அல்லது மத அனுஷ்டானங்களுடன் தொடங்கும் ஒருநாடு தனது மதத்தலங்களை படைத்தரப்பின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டதா? இவ்வாறு தனது மதநம்பிக்கைகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பாத ஒருமக்கள் அரசியலில் மட்டும் எப்படிக் கேள்வி எழுப்புவார்கள்? யாழ்ப்பாணத்தில் உள்ள அரங்கச் செயற்பாட்டாளரான கலாநிதி சிதம்பரநாதன் அடிக்கடி கூறுவார் ‘கிரிட்டிக்கலாக – விமர்சனபூர்வமாகச் சிந்திக்கும் மக்களின் தொகையை அதிகரிக்க அதிகரிக்க அரசியலில் மாற்றம் உண்டாகும்’ என்று ஆனால் தனது மதநம்பிக்கைகள் வழிபாடு என்பவற்றைக் குறித்து ‘கிரிட்டிக்கலாக’சிந்திக்காதஒருசமூகம் சமூகப் பொருளாதாரஅரசியல் விவகாரங்களில்மட்டும் கிரிட்டிக்கலாகஎப்படிச் சிந்திக்கும்? #உயிர்த்தஞாயிறு #நிலாந்தன் #eastersundayattacklk

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More