Home இலங்கைகெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…

கெக்கிராவ முன்பள்ளி பாடசாலையில், வெடிபொருட்கள் – இருவர் கைது…

by admin

கெக்கிராவ பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த முன்பள்ளி பாடசாலை கட்டடமொன்றின் அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு தொகை வெடிப்பொருள்களுடன், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய, இருவர் இராணுவத்தினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் மடாடுகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேநகபர் ஒருவர் இந்தக் கட்டடத்தின் பொறுப்பானவராகக் கடமையாற்றி வந்துள்ளதுடன், இந்தக் கட்டடத்திலிருந்து சீ4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிப்பொருள் 168 கிலோகிராம், மாக்கர் பேனைக்குள் வைக்கப்பட்டிருந்த பச்சை, மஞ்சள் நிற வயர்கள், டெட்டனேட்டர், தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட பிரிவினைவாத மத புத்தகங்கள் 5 என்பனவும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இமேலும் குறித்த சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கெக்கிராவ கொவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More