கிளிநொச்சி மாவட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான கிறிஸ்தவ அமைப்பு..
எமது நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளை ஆதாிப்போம், அவர்களை பராமரிப்போம் என கிளிநொச்சி மாவட்ட நீதிக்கும் சமாதானத்துக்கமான கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்துள்ளர்.
இது தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது நட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழலின் பின்னர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களும் எம்நாட்டில் தஞ்சம் புகுந்திருந்தவர்களுமான அகதிகள், அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு நீர்கொழும்பு காவல் நிலையத்திலும் பள்ளி வாசல்களிலும் திருச்சபையிலும் தஞ்சம் புகுந்து இருந்தனர். இம் மக்களில் 35 நபர்களை பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம். பின்னர் இதை எதிர்க்கும் முகமாக பல போராட்டங்களும் எழும்பியுள்ளதை அடுத்து மனவேதனை அடைகின்றோம்.
இவ்வாறு நிர்க்கதிக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவி செய்வது எமது கடமையும் பொறுப்புமாகும் . தமிழர்களாகிய நாமும் ஒரு காலகட்டத்தில் இவ்வாறு நிர்க்கதியாகி பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்து சென்றபொழுது அந்நாடுகள் எங்களுக்கு தஞ்சம் கொடுத்து எம்மவர்களை ஆதரித்து புகலிடம் கொடுத்ததை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. எனவே எம்மிடத்தில் தஞ்சம் புகும் நிலையில் உள்ள மக்களுக்கு ஆதரவு அளிக்க அவர்களை பராமரிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டுமென நாம் விரும்புகிறோம். . இவ்விடயத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், அகதிகளுக்காக வேலைசெய்யும் அமைப்புகள் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிலையில் அகதிகளை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்று தங்கள் சொந்த வீட்டில் வைத்துப் பராமரிக்க முன்வந்த மனிதாபிமானம் படைத்தவர்களையும் நாங்கள் பாராட்டுகின்றோம். எனவும் கிளிநொச்சி மாவட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்துள்ளது.