பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தத் தடவை பல்கலைக்கழக அனுமதிக்காக 70,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் 31,000க்கும் அதிகமானோரை பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன தெரிவித்துள்ளார். எனினும் , பாதுகாப்பு காரணங்களுக்காக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதால எதிர்பார்க்கப்பட்ட காலப்பகுதியில் மாணவர்களை இணைத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் இது தொடர்பில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார். #பல்கலைக்கழகமானியங்கள்ஆணைக்குழு