தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் பயங்கரவாதி அல்ல எனவும் அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவில்லை எனவும் தெரிவித்த ஜனாதிபதி நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது எனவும் தான் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரைப் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ததில் தவறேதும் இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். #தமிழ்அரசியல்கைதிக #மைத்திரிபாலசிறிசேன #ஞானசார தேரர் #பொதுமன்னிப்பு
1 comment
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தேசிய தௌஹித் ஜமாத்தின் பயங்கரவாதத்
தாக்குதல்களுடன், தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்பு படுத்தி அறிக்கை விடும் ஜனாதிபதியின் நடவடிக்கை மிகுந்த கண்டனத்துக்குரியது. இதை ஒரு பச்சை இனவாத
நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும்.