190
தமிழ் திரையிசை வரலாற்றில் புகழ்பெற்ற பல பாடல்களை இணைந்து உருவாக்கிக் கொண்ட, இசையமைப்பாளர் இளையராஜாவும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் நேற்று சந்தித்துக் கொண்டனர்.
கடந்த சில மாதங்களின் முன்னர், இசை அமைப்பாளர் இளையராஜா ‘காப்புரிமை பெறாமல் என் பாடலை கச்சேரிகளில் பாடக்கூடாது’ என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு அறிவித்தமை காரணமாக இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. அத்துடன் இது இசை ரசிகர்களுக்கு வேதனையை அளித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று இருவரும் சந்தித்து கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பரிமாறப்பட்டு வருகின்றது. இளையராஜாவின் பிறந்தநாளான வரும் ஜூன் 2ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி பாடல்களை பாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#இளையராஜா #எஸ்.பி.பாலசுப்ரமணியம் #சந்திப்பு #இசையமைப்பாளர் #காப்புரிமை
Spread the love