பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த ‘பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படத்தின் வசூல் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமங்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார்.
‘பிஎம் நரேந்திர மோடி’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி வெளியாக இருந்தபோதும், தேர்தல் நேகாலத்தில் திரைப்படத்தை வெளியிட கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மே 24ஆம் திகதி படம் திரைக்கு வந்தது.
ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்த மோடி எப்படி கடுமையாக உழைத்து பிரதமர் ஆனார் என்பதை பற்றி படம் விளக்குகிறது. நரேந்திர மோடி குறித்த நல் அபிப்பிராயங்களை கொண்டாதாக படம் காணப்படுகின்றது. அமித்ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷியும், மோடியின் அப்பாவாக ராஜேந்திர குப்தாவும் நடித்துள்ளனர்.
பா.ஜனதா தலைவர்கள் பிஎம் நரேந்திர மோடி படத்தை பாராட்டினாலும் பொதுவெளியில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. பெரும்பாலான விமர்சகர்கள் படத்துக்கு குறைந்த மதிப்பெண்களே வழங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படம் மூன்று நாட்களில் நாடு முழுவதும் சேர்த்து ரூ.11.14 கோடி வசூல் செய்துள்ளதாகவும் முதல் நாளில், ரூ.2.88 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.3.76 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.4.50 கோடியும் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Add Comment